ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமான விபத்தில் சடலங்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என தெஹ்ரான் அவசரசேவை மையத்தின் தலைவர்

ஈரானில் உள்ள கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானமான போயிங் 737, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த 167 பயணிகள் 9 விமானக் குழுவினர் என 176 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த வீரர்கள் உடல்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், ஈரான் உள்ளுர் ஊடகத்திற்கு பேட்டியளித்த தெஹ்ரான் அவரசசேவை மையத்தின் தலைவர் டாக்டர் பேமன் சபாரியன், முதற்கட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

 

உடல்கள் கிட்டத்தட்ட சிதறிய விழுந்துள்ளன, பயணிகள் மற்றும் விமானக் குழுவினரை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.

மீட்புப் பணியாளர்கள் சுமார் இரண்டு ஹெக்டேர் நிலத்தில் சிதறி கிடக்கும் உடல்களை மீட்டு தடயவியல் நிறுவனத்திடம் ஒப்படைத்து வருகிறார்கள் என சபாரியன் தெரிவித்துள்ளார்.