தற்போது இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இதில் இலங்கை அணி இந்தியாவை எதிர்த்து மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இருபது போவர் கிரிக்கெட் போட்டி ஆனது நேற்று கௌகாத்தியில் தொடங்கியது ஆனால் இந்தப் போட்டியானது மழையின் காரணமாக இந்தப் போட்டி நடத்த முடியாமல் கைவிட்டுப் போனது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக இந்திய அணி அறிவித்தது டாஸ் போட்ட சிறிது நேரத்திலேயே மழை குறிப்பிட்டது இதன் பிறகு மழை நின்ற பிறகு மைதானத்தை உலரவைக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது இதனால் இந்தப் போட்டியின் நடுவர்கள் இந்தப் போட்டியானது யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகளைப் வழங்கப்படுவதாக அறிவித்தது.

மழை குறுக்கிட்டதால் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது இதனால் இதை அப்புறம் படுத்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இதில் ஒரு முயற்சியாக மைதானத்தை அயன் பாக்ஸ் கொண்டு சூடுபடுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.