நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறாராம், விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
சென்னை: நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறாராம், விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா தவிர அஜித் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். சமூக வலைத்தளங்களில் அவர் இல்லை. அதேபோல் சினிமா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வது இல்லை.

நடிகர் அஜித் டிவிட்டரில் இல்லை. ஆனால் அவர் எப்போது டிவிட்டருக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் டிவிட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ அஜித்திற்கு டிவிட்டரில் இருக்கும் மாஸ் குறித்து தி இந்து நாளிதலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அதில், அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அவருக்கு டிவிட்டரில் பெரிய ரசிகர் படை இருக்கிறது. அவர் டிவிட்டர் வந்து ரசிகர்களுடன் தொடர்பு கொண்டால் நாங்கள் சந்தோசம் அடைவோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அஜித்தை டிவிட்டர் அழைக்கிறது என்று பலரும் டிவிட் செய்ய தொடங்கினார்கள்.

இதனால் இன்னும் சில அஜித் விரைவில் டிவிட்டருக்கு வர போகிறார். டிவிட்டர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் டிவிட்டருக்கு வருவார். அங்கு அவர் ரசிகர்களுடன் பேசுவார் என்று பலரும் டிவிட் செய்தனர்.

இது தொடர்பாக நடிகர் அஜித்தும் ஆலோசனை செய்துள்ளார். டிவிட்டருக்கு செல்வது சரியா ? சரியாக நேரம் செலவழிக்க முடியுமா என்று ஆலோசனை செய்து இருக்கிறார். இது தொடர்பாக சில ரசிகர்கள் உடனும் தனது குடும்பத்தினருடனும் அவர் பேசி உள்ளார்.

இந்த நிலையில் அவர் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அஜித் டிவிட்டருக்கு வர மாட்டார் என்கிறார்கள். நான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். ஆக்கபூர்வமான விஷயங்களை செய்கிறேன் என்று அஜித் கூறியுள்ளாராம்.

ரசிகர்களும் நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ய கூடாது என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கிறார்கள். இதனால் அஜித்தின் அபிஷியல் டிவிட்டர் பக்கம் இப்போதைக்கு வருவது சந்தேகம்தான் என்கிறார்கள்.