மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அந்த தொடருக்கான கோப்பையை கோஹ்லி இளம் வீரர்களிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவு அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய போதும், நேற்று நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி வெற்றி மூலம் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி சாதித்தது.

இந்நிலையில் கோப்பையை கையில் வாங்கிய கோஹ்லி, உடனடியாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனியிடம் கொடுத்து அழகு பார்த்தார்.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றிய பின்பு, துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் கைகளில் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.