கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டோனிக்கு பந்து வீசிய தமிழக வீரர் சாய் கிஷோரை சென்னை அணி வாங்கியுள்ளதால், அது குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் ஆரம்பித்தது.

இதில் அணி நிர்வாகம் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைத்து மற்ற வீரர்களை கழற்றிவிட்ட நிலையில், அந்த வீரர்களுக்கும், ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்களுக்கும் ஏலம் நடைபெற்றது.

அதன் படி சென்னை அணி யாரும் எதிர்பார்த வகையில், சாய் கிஷோரை அவருடைய அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

இந்நிலையில் அவர் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சாய்கிஷோர் தமிழகத்தை சேர்ந்தவராம், 23 வயதாகும் இவர் தமிழக அணிக்காக விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் தொடரில் விளையாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சாய் கிஷோர் டோனிக்கு பந்து வீசியுள்ளார்.

இவரின் பந்து வீச்சைக் கண்ட டோனி அவரை வெகுவாக பாராட்டினார். இதையடுத்து தான் தற்போது சாய்கிஷோரை சென்னை அணி மறக்காமல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் சாய்கிஷோர் சென்னை அணிக்காக நான் வாங்கப்பட்டது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நிச்சயமாக என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.