இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பில் நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது நடந்த கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?

குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.