2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சற்றுமுன்னர் கொல்கத்தாவில் தொடங்கியது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் சற்றுமுன்னர் கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்த ஏலத்தில் 186 வெளிநாட்டு வீரர்கள், 143 உள்நட்டு வீரர்கள் என மொத்தம் 332 பேர் இறுதிகட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தற்போது ஏலத்தில் முதல் வீரராக அவுஸ்திரேலியாவை சேர்ந்த Chris Lynn மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 20 மில்லியன் விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

Eoin Morgan கொல்கத்தா அணிக்காக 50.5 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 மில்லியனுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் பெங்களூர் அணிக்காக ரூ 4.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.