அஜித்தின் 60 வது படமான ‘வலிமை’-யின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஹாலிவுட் பைக் ஸ்டண்ட் நடிகர் ஒருவரையும் படத்தில் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் படத்தில் பிட்டாக இருப்பதோடு, கருப்பு முடியுடன் இளமையான தோற்றத்தில் தோன்ற இருக்கிறாராம். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, அஜித்தை மீண்டும் கருப்பு முடியுடன் கூடிய இளமை தோற்றத்தில் தோன்ற இருப்பதால் ரசிகர்களும் குஷியாகியிருக்கிறார்.

இதற்கிடையே, இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா, இலியானா உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட் நடிகை ஒருவரை ஹீரோயினாக்க முயற்சித்து வந்த நிலையில், அதற்கு அஜித் தரப்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ‘வலிமை’ படத்தின் ஹீரோயினாவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக ’வலிமை’ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.