நடிகர் சிம்பு சபரி மலைக்கு இருமுடி கட்டிக் கொண்டு கிளம்பியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் தொடங்க உள்ளது, ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சபரி மலைக்கு மாலை அணிந்து 40 நாள் விரதம் இருந்து வந்த சிம்பு தற்போது இருமுடி கட்டி கொண்டு சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கிளம்பியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஐய்யப்பன் தரிசனம் சிம்புவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தட்டும் என அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.