நடிகை நிவேதா பெத்துராஜ் “ஒரு நாள் கூத்து” படத்தை தொடர்ந்து “டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன்” போன்ற படங்களில் நடித்திருக்கிறார் . இந்த நிலையில் தெலுங்கில் “சித்ரலகரி” படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்து “புரோசேவரெவருரா” படத்தில் நடித்தார் அந்த படமும் ஹிட்டானது. இதையடுத்து நிவேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன.

நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். அதன் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார். நிவேதா அவ்வப்போது ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கம். அந்த வகையில் சிறுவயதில் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த நிவேதா பெத்து ராஜ், வெட்கத்தை விட்டு சொல்கிறேன் சிறுவயதில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. பள்ளியில் இருந்து சாக் பீஸ் திருடி வந்து விடுவேன். அதனை வைத்து அம்மாவை கோலம் போட சொல்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், சிறுவயதில் பவர் கட் ஆகிவிட்டால் டார்ச் லைட் அடித்து அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்களை பயமுறுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய உங்களுடைய கருத்த கீழே கமெண்ட் செய்யுங்க.