தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா, இவர் சினிமாவில் பாலுமகேந்திராவின் படைப்பிலிருந்து உருவாக்கப்பட்டவர், பின்னர் தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை பெற்று சாதனை படைத்தவர், பல இயக்குனர்கள் தங்களது படத்தில் ஹீரோயின் அழகு, காதல் ரொமான்டிக் என படம் ஃபுல்லா கலர்ஃபுல்லாக இருக்கும்.

ஆனால் பாலாவின் படம் என்றால், அழுகை அழுக்கு கருப்பு என வித்தியாசமான கோணங்களில் எடுத்திருப்பார். அதேபோல் பாடலுக்காக படம் இல்லை படத்திற்காக ஒன்று இரண்டு பாடல்கள் இருந்தால் போதும் என வித்தியாசமான கோணத்தில் தமிழ் சினிமாவை கொண்டு சென்றனர்,.

இவர் முதன்முதலாக ஆயிரத்து 1999 ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தை தான் இயக்கினார், அதோடு தனது முதல் திரைப்படத்திலேயே அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர், அதன் பிறகு இயக்குனர் பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைதப்பட்டை, நாச்சியார் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

என்னதான் இவரின் திரைப்படம் கதை ரீதியாகவும் நடிப்பு ரீதியாகவும் பிரமிக்க வைத்தாலும் வசூல் ரீதியாக சில திரைப்படங்கள் கொஞ்சம் கம்மிதான், அதேபோல் பாலா இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் அதிகபட்ஜெட் கிடையாது குறைவான பட்ஜெட் தான். ஹீரோ ஹீரோயின் இருந்தாலே படம் ஹிட்டாகும் என பலரின் தவறான எண்ணத்தை மாற்றியவர் இவர்தான்.

மேலும் இவர திரைப்படங்கள் வசூலில் பெரிய சாதனை படைக்க விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளது, பாலாவை சினிமாவில் கோபமாகவும் டெரர்ராகவும் இருப்பார் என பலர் கூறுகிறார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் நகைச்சுவை மனிதர் இதுவரை பாலா 15 பிலிம்பேர் விருதுகளையும் தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 14 உலக அளவில் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலா 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி முதுமலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது, இதோ அவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.