பிரிங்கா ரெட்டியை கொலை செய்த 4 குற்றவாளிகள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயர்கள் தவறாகவும் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பரப்பட்டுள்ளது.

பிரியங்கா ரெட்டி என்ற பெண் தெலுங்கான மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரியங்கா கொலை தொடர்பான விசாரணையில் அவர்கள் தப்பி செல்ல முற்பட்டதால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அந்த குற்றவாளிகள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் அவர்கள் பெயர் முறையே முகமது பாஷா, முகமது இக்பால், முகமது ரகீம், முகமது அக்ராம் என்று பரப்பட்டது. மேலும், இஸ்லாமியர்கள் தான் இதுபோன்ற செயல்கள் செய்து வருவதாக தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சமூக வலைதளங்களில் அவர்களின் பெயர்கள் பரப்பப்பட்டன.

ஆனால் அவற்றில் உண்மையில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி அவர்களின் பெயர்கள், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சின்ன கேஷவலு, முகமது ஆரிப் என்றும், அவர்களில் ஒரவர் மட்டுதான் இஸ்லாமியர் மற்றவர்கள் அனைவரும் இந்து மத்தை கடைபிடித்தவர்கள் என்றும் தெலுங்கான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பிரியங்கா ரெட்டியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், முறையற்ற வகையில் கமெண்ட் செய்த 22 வயது நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.