எப்போதும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், மாறுபட்ட குணச்சித்ர வேடங்களில் நடித்து பெயர் வாங்கினால் போதும் என்று முடிவு செய்துள்ள நடிகைகளில் நடிகை பூர்ணாவும் ஒருவர். இவர் நடித்த முத்தையா இயக்கிய கொடிவீரன் என்ற படத்திற்காக தலைமுடியை தியாகம் செய்து மொட்டை போட்டுக் கொண்டார்.இது அதிகமாக சமுகவலைதள பகுதியில் பேசப்பட்டது.

தான் நடித்த படங்களில் படுகுண்டாக இருந்த பூர்ணா தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து முன்னணி நடிகைகளை போல போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.நடிப்பும் நடனமும் எனது இரு கண்கள் என்று நடிகை பூர்ணா அவர்கள் அடிக்கடி இவர் சொல்வாராம்.

இவருடைய கனவு என்னவென்றால் சின்ன வயதுக் கனவு நடனப்பள்ளி ஆரம்பிப்பது.அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் தானே நடனம் சொல்லிக் கொடுப்பது தான் கனவு என்றும் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் முறையாக அனைத்துவித நடனம் கற்றுக் கொண்டு நடிகை சோபனா போல நடனப்பள்ளி ஆரம்பிக்கப் போகிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.