ஹரி சார் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுக்கிட்டது எல்லாம் மக்கள்கிட்டே புழங்குறதுதான். நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கோபதாபம், குற்றம், துரோகம், இதைத்தான் வெளியே கொண்டு வருகிறார். துரைசிங்கம் நம்மில் ஒரு ஆளா ஆனதுக்குக் காரணம், மக்கள்கிட்டே நெருங்கியதுதான். துரைசிங்கம் அம்மா பேச்சை கேட்கிறார். அப்பாவின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறார். காதலிக்கும் நேரம் தருகிறார்.

ஹரிக்கு உறவுகளின் பெரும்கூட்டம், மக்கள் மனுஷங்க இல்லாமல் படம் பண்ணவே முடியாது. இவ்வளவு பாசம், நேசத்துக்கு பின்னாடிதான் அவர் போலீஸ் அதிகாரி. அதனால்தான் சி-3 துரைசிங்கம் பிராண்ட் ஆனது என்கிறார் சூர்யா. செம புன்னகையில் மிளிரும் சூர்யாவின் ஸ்பெஷல் சிரிப்பு. இப்பவும் தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் சூர்யாவுக்கு அதி முக்கிய இடம்தான்.

சிங்கம் நடிச்சது என் கேரியரில் ரொம்ப நல்ல விஷயம். அந்த படத்தில் என் கைக்கு வந்தவங்க, ரொம்ப கஷ்டப்படுகிற சாதாரண மக்கள். என்னை எங்கே பார்த்தாலும் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு, சமயங்களில் பைக்கில் விரட்டி, தலைவா…துரைசிங்கம் டாப்புன்னு கை வலிக்கிற மாதிரி குலுக்கி சொன்ன மக்கள். நானும் ஹரி சாரும் வேறு ஒரு படம் பண்ற மாதிரிதான் இருந்தது.

அதற்கான வேலைகள்கூட ஆரம்பிச்சது. திடீரென்று ஹரி சார் எஸ்-3க்கு ஒரு லைன் கிடைச்சிருக்கு. தொடர்ந்து அதை பிடிச்சு போகவானு கேட்டார். சரி, செய்திரலாம்னு சொன்னது மட்டும்தான் நான். அடுத்தடுத்து இறங்கி அவர் நின்னு முனைப்பெடுத்து சூர்யா செய்த வேலைதான் சி-3.

சினிமாவுக்கு மொழி தடையில்லை. ஒடிசா, வங்காளி, கன்னடம், சிந்தி வரைக்கும் சிங்கம் போய் அப்படியே காட்சிகளைகூட மாற்றாமல் சக்ஸஸ் ஆகியிருக்கு. எமோஷனை பேலன்ஸ் பண்ணினது, குடும்பம், கிராமம்னு வேல்யூ சம்பந்தமாகவும் இருந்ததுதான் சிங்கத்தோட கொடி இந்தியா முழுக்க பறக்கறதுக்கு காரணம். நானே ஒரு கட்டத்தில் துரைசிங்கத்துக்கு ஃபேன் ஆகிட்டேன்.

அவங்களுக்கு எப்பவும் சிங்கம் பிடிக்கும். இப்ப சி-4 வரணும்னு விரும்புறாங்க. பாகுபலி லுக் எல்லாம் மாத்திக்கிட்டு, சிங்கத்தின் தொடர்ச்சியா வந்தாங்க. அவங்க இவ்வளவு நாள் நிலைச்சு நிற்கிறதுக்கு அவங்களோட சின்சியாரிட்டி காரணம். ஹன்சிகாவுக்கு பதிலாக ஸ்ருதி. இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து நடிச்சதால் தெரிஞ்சவர்களாக இருந்தோம். அவங்க உழைப்பும் இதில் நிறைவுதான்.

நேருக்கு நேர் படத்தின்போது ஒரு தடவை வந்தது. கடந்த 18- வருஷமா எந்த ஷூட்டிங்கிற்கும் வராதவங்க விசாகப்பட்டினத்துக்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தாங்க. அம்மா தோளில் ஒரு கைப்பையை வைச்சுக்கிட்டு, ஹரி சார் பக்கத்தில ஒரு சேரை போட்டு உட்கார்ந்து மானிட்டரில் சீன்களை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதே யூனிட், அதே டெக்னீஷியன்ஸ்னு கிட்டத்தட்ட அந்த யூனிட்டே ஒரு குடும்பம் மாதிரிதான். எனக்கு அந்த டீமில் இருக்கிற ஒவ்வொருத்தர் பெயரும் தெரியும்.

அம்மா, அப்பா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க சுத்தி வந்தாங்க. அப்பா விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அம்மாவை கூட்டிப் போய் சிந்து பைரவி ஷூட்டிங் நடந்த பாறைகளை எல்லாம் காண்பிச்சார். அப்ப அவங்க இரண்டு பேர் முகத்திலும் இருந்த சந்தோஷம் அவ்வளவு அழகு. என் பசங்களும், ஹரி சார் பசங்களும் கூடி விளையாடியதும், அப்பா அம்மா என்னோட இருந்த நாட்களும் ஞாபகத்தில் அப்படியே இருக்கு.