தமிழ் சினிமாவின் நீண்டகாலமாக உச்சகட்ட இசையமைப்பாளராக இருந்து வருபவர். இளையராஜா அவர்கள் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த இடத்தில்தான் பாடல்பதிவு, இயக்குனர்கள் சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோவில் புதிய இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்க்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் அந்த கட்டடம் மூடப்பட்டது. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கிப் போகிறது. இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி இளையராஜாவுக்கு ஆதரவாக திரையுலகம் திரையுலகினர் முற்றுகை போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர்.இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழ்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை கோரி இளையராஜா வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த பிரச்சனை கூடிய விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று நம்பலாம்.