தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் ரஜினிகாந்த்தான். எப்படியாவது இவரது இடத்தை பிடிக்க வேண்டும் என்று பல பிரபல ஹீரோக்களே போட்டி போட்டுதான் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் மிகப்பெரியது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல உலக நாடுகளிலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் ஷங்கரின் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு 26 கோடி சம்பளம் வழங்க பெற்றது. இதன் மூலம் அமிதாப்பச்சனுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரும் பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பத்ம பூஷன், பத்ம விபூஷண் , மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற பல விருதுகளை பெற்று உள்ளார். தமிழ் சினிஉலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் காயகவாட். சாதாரண பஸ் கண்டக்டராக பணிபுரிந்த இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் பாலச்சந்திரரிடம் “அபூர்வராகங்கள்” படம் மூலம் அறிமுகம் ஆனார்.

ரஜிகாந்த்தின் பெற்றோர் ராமோஜிராவ் காயக்வாட் மற்றும் ராமாபாய் ஆவர். சிறுவயதிலேயே தாயை இழந்த ரஜினி தனது தந்தையுடன்தான் இளம் பருவத்தில் வளர்ந்து வந்தார். அவர் தன் தந்தை உடன் இருக்கும் அறிய புகைப்படம் சமீபத்தில் கிடைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.