தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்த படம் பிகில். இந்தப் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது. இதுதான் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த சிங்கிள் ட்ராக் ஆக இருந்து வந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியான 18 மணி நேரத்தில் 6.4 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் ரஜினி தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது தான் ஒருவர் தான் என்பதை தனது சாதனைகள் மூலமாகவே மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.