ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் குறித்த விபரம் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டது.

ஐபிஎல் 2020-க்கான ஏலம் வருகிற டிசம்பர் 19-ம் திகதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

யுவராஜ் சிங் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

பென் ஸ்டோக்ஸ்- புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பென் கடந்த 2017ல் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

யுவராஜ் சிங் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக யுவராஜ் சிங் கடந்த 2014ல் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

தினேஷ் கார்திக் – டெல்லி டேர்டெவில்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை 2014ல் 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஜெயதேவ் உனத்கட் – இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2018ல் 11.5 கோடி ரூபாய் ஏலத்தில் வாங்கியது.