ஆங்கில கெட்டவார்த்தை, குடி, கும்மாளம் என குடும்ப ரசிகர்களை பற்றி சிறுத்தும் கவலைப்படாது நடித்த படங்கள் தான், சில வருடங்களுக்கு முன்பு தான் சந்தித்த சரிவிற்கு காரணம் என்பதை கேட்ச் செய்து இருக்கிறாராம் நடிகர் அஜித்.

வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வைபோல குடும்ப ஆடியன்ஸை டச் செய்து விட்டால், படம் வெற்றி பெறுவது உறுதி என்கிற மனநிலைக்கு வந்து விட்டார் அஜித்.

இதற்கு, ‘சில வருடங்களுக்கு முன்பாக பொறுப்பில்லாமல் பெண்களை கேலி செய்து பின்னால் சுற்றும் படங்களில் நடித்து விட்டேன். இனி அந்த தவறை செய்யமாட்டேன்’ என நெருங்கிய வட்டாரங்களிடம் கூறி இருந்த தகவலே சான்று.

இந்நிலையில் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் இதே செண்டிமெண்டை அஜித் கடைபிடிக்க இருக்கிறார். இதன் காரணமாக ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 4 நாயகிகள் வலிமை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ,அதே சமயம் கவர்ச்சி ஆபாசம் துளியும் இல்லாத காதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனராம்.