அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சொந்த மகளை அமிலத்தில் கரைத்து படுக்கை அறையில் பதுக்கி வைத்திருந்த பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 38 வயதான மோனிகா டொமிங்குவேஸ் மற்றும் அவரது கணவர் 33 வயதான ஜெரார்டோ சவலா ஆகிய இருவரும் தங்களது 2 வயது மகள் ரெபேக்கா கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெரார்டோ சவலாவுக்கு 14 ஆண்டுகளும் தாயார் மோனிகாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாலையே தண்டனை காலம் குறைக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக இருவர் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்படவில்லை. சிறுமி ரெபேக்காவின் மரணம் விபத்து என்றே தாயார் மோனிகா விசாரணை அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

மட்டுமின்றி குழந்தையின் சடலத்தை உரிய முறைப்படி நல்லடக்கம் செய்யவும் தாம் கணவரிடம் கோரியதாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி இறந்ததாகவும் தந்தை சவாலா தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மரண காரணம் தொடர்பில் உறுதியான தகவல் வெளிவராத நிலையில், பொலிசார் கொலைக்குற்றம் சுமத்தாமல் விசாரணையை முன்னெடுத்தனர்.

இவர்களின் படுக்கை அறையில் பாதுகாக்கப்பட்ட பீப்பாய் ஒன்றில் அமிலவும் அதில் உடல் சிதைந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலமும் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

சிறுமி ரெபேக்கா மட்டுமின்றி இந்த தம்பதிகளுக்கு மேலும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களை தற்போது குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டுள்ளனர்.