நடிகர் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். விஜய்யும் அரசியல் பற்றி அதிக ஆர்வத்துடன் அதிகம் பேசி வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் அஜித் பற்றி தற்போது பேசுகின்றனர். ‘ரஜினி, கமல், விஜய் மட்டும் தான் வரவேண்டுமா, அஜித் வரக்கூடாதா?’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார்.

மேலும் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பேசியுள்ளார். “ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள்.

மேலும் அஜித் பற்றி பேசிய அவர் “தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித். கண்ணியமானவர். தொழில் பக்தி மிக்கவர்” என குறிப்பிட்டார்.