பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான மவுசு குறைந்தபாடில்லை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கோழிகளும் தேவைப்படுகின்றன.
இதனால், கோழிகளுக்கு சில வேதி மருந்துகளை கொடுத்து வெறும் 40 முதல் 45 நாட்களில் 1.5 கிலோ எடை வரும் அளவுக்கு பெருக்க வைத்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள.
இந்நிலையில், இதனை இன்னும் துரிதப்படுத்தி கோழிகளை இன்னும் வேகமாக வளர வைக்க முயற்சி செய்ததன் விளைவாக கோழிகள் கடுமையான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாம்.
கோழியை வெறும் 20 நாளில் வளர செய்யும் வேதிப்பொருட்களை பயன் படுத்தியதன் காரணமாக கோழிகளுக்கு தசை வீக்கம் , கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருப்பதை கோழி வளர்பவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், அவற்றை அழிக்காமல் ஏற்கனவே உள்ள பழைய பிராய்லர் கோழிகளுடன் கலந்து விட்டு நாடு முழுக்க விநியோகம் செய்து விட்டனர் என்று கூறுகிறார்கள். இதனை உண்ணும் மனிதர்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் கூறுகிறார்கள்.
எனவே அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிராய்லர் கோழிகளை வாங்க வேண்டாம் என்று வாட்சப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.