தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இவர் வாய் பேசாத, காது கேளாத ஒரு மாற்றுத் திறனாளி.
இவர் தொடர்ந்து ‘ஈசன்’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தனி ஒருவன்’, ‘குற்றம் 23’ போன்ற படங்களில் நடித்துள்ளார். வாய் பேசாத, காது கேளாத இவர் தனக்குக் கொடுக்கப்படும் ரோல்களை சிறப்பாக செய்து முடிப்பவர்.
சமீபத்தில் தெலுங்கான மாநில அரசு இவருக்கு ஒரு பொறுப்பை வழங்கியது. தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதற்கான விளம்பர தூதராக அபிநயா நியமிக்கப்பட்டார்.
இதற்காக, சம்பளம் எதுவும் வாங்காமல் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் அபிநயா.
மாடர்ன் உடைகளின் மீது இவர் கொண்டுள்ள அதீத காதலை பிரதிபலிக்கும் விதமாக இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.