பிக்பாஸ் சீசன் 3ல் மக்களின் பெரும் ஆதரவையப் பெற்ற போட்டியாளர்கள் என்றால் அது கவின், லொஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும், விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் லாஸ்லியா, கவின், ரேஷ்மா, மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, முகென், வனிதா, ஷெரின், அபிராமி, என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் முகென் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கவின், லொஸ்லியா இருவரும் ஒரே நிற உடையில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாலும், மேடையில் நிற்கையில் இருவரும் கொஞ்சம் கூட சந்தோஷமாக இல்லாமலே காட்சியளித்தனர். குறிப்பாக கவின் முகம் பயங்கர சோகத்தில் காணப்பட்டது.

கவின், லொஸ்லியா காதலைக் குறித்து எதாவது வாய்திறப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு குறித்த காட்சி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.