கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

பிறகு தொலைக்காட்சி டான்ஸ் ரியாலிட்டிஷோவில் கலந்து கொண்ட இவர் உடல் எடை கூடி குண்டாகிப்போனார்.மேலும், தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார்.

தற்போது, உடல் எடையைகுறைத்துள்ள அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். மேலும், தன்னுடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், சொர்கத்தின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறேன் என்று கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.