தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் ஒருவரும் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

நடிகர் அஜித் இந்த ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்தான் வலிமை படத்தையும் தயாரிக்கிறார்

அஜித் ரெடியானவுடன் படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என்று அண்மையில் கூறியிருந்தார் படத்தின் புரொடியூசரான போனி கபூர். இந்நிலையில் வலிமை படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கவுள்ள தல 60 படத்தில் நடிகர் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக, கடந்த 2002-ம் ஆண்டு வெளியான இயக்குனர் எழில் இயக்கிய ராஜா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் வடிவேலு. அந்த படத்தில் அஜித்திற்கும், வடிவேலுவுக்கும் சில பிரச்சனை ஏற்பட்டு அதன் பிறகு கடந்த 18 ஆண்டுகளாக அவருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து விட்டார் அஜித்.

அவர்கள இருவருக்கும்என்ன பிரச்சனை என்று நம்முடைய தளத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒரு வேளை நீங்கள் அதனை படிக்க தவறியிருந்தால் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படித்துக்கொள்ளுங்கள்.

ராஜா படப்பிடிப்பில் அஜித் – வடிவேலுவு இடையே நடந்த நிஜ சண்டை ! – அஜித்தின் மறுபக்கத்தை பார்க்கலாம் வாங்க..! -18 வருட வரலாறு..!

அப்போது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதன் பின்னர் இணைந்து நடிப்பதை இருவரும் தவிர்த்து வந்தனர். இதனால் அதன்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியிலும் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் மற்றும் வடிவேல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடிகர் வடிவேல் அதிக பட வாய்ப்புகள் இன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.