தல அஜித் அவர்கள் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்க உள்ளார்.

படத்திற்கு பூஜை போட்டு வலிமை என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு.

டெல்லியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

2020-ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம், உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படமும் தீபாவளியை குறிவைத்தே தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பேட்ட படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.