தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து உள்ளனர். தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் கேஸ்ட் & க்ரூ மிகவும் பெரியதாக இருக்கிறது.

அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இப்போது இன்னொரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தை தொடர்ந்து தடயர தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் தளபதி 65 படம் உருவாகப் போகிறது என சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக நெருங்கிய வட்டாரங்களில் கேட்டபோது இது முற்றிலும் தவறான செய்தி. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவித்து உள்ளனர். சரி, தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக நீங்கள் எந்த அளவிற்கு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..?