நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ பட ரிலீசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் கடன் பிரச்சினையினால் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.டி.ராஜா. இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 24ஏஎம் ஸ்டுடியோஸ்.

டிஆர்எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு ரூ.10 கோடி கடனாக பெற்றார். ஆனால் அவர் வட்டியையும் அசலையும் திருப்பி கட்டவில்லை.

இதற்கிடையே ஆர்.டி.ராஜாவின் 24ஏ.எம். நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படமான, மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தை தயாரிக்க தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கேஜேஆர் பிலிம்ஸ்க்கு கைமாறியது.

எனவே ஆர்.டி.ராஜா தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஹீரோ படம் ஆரம்பிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்.டி.ராஜா ஆகியோர் பதிவிட்ட டிவீட்டுகள், புகைப்படங்களை ஆகியவற்றை ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது டிஆர்எஸ் நிறுவனம்.

எனவே ஆர்.டி.ராஜா தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஹீரோ படம் ஆரம்பிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்.டி.ராஜா ஆகியோர் பதிவிட்ட டிவீட்டுகள், புகைப்படங்களை ஆகியவற்றை ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது டிஆர்எஸ் நிறுவனம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கணேசன், டிஆர்எஸ் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஹீரோ படத்தை வெளியிட தடைவிதித்தார். 24ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் மேலும் இரண்டு படங்களின் ரிலீசுக்கும் நீதிபதி தடைவிதித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் 20ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஹீரோ என்ற தலைப்பிற்காக சிவகார்த்திக்கேயனுக்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் ஒரே நாளில் ஒரே பெயரில் தங்களது பட போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இன்னும் அந்த பிரச்சினையே ஓயாத நிலையில் சிவா படத்திற்கு மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.