9 நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான இன்பத் துன்பங்களை சரிபாதியாக அளிக்கக் கூடிய ஒரே கடவுளாக கருதப்படக் கூடியவர் சனி பகவான்(சனி கிரகம்) ஆகும்.

சனி பகவான் கொடுப்பதையும், கெடுப்பதையும் இந்த உலகில் யாராலும் தடுக்க முடியாது.

எப்போதுமே கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.

நம் முன்னோர்களின் ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற மிக முக்கியமான பதவியை வகிக்கின்றார்.

சனி பகவான் தான் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.பெயர்ச்சி என்றால் என்ன?
எப்போது ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம்.

எந்த ஒரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றது.

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
நவக்கிரகங்களில் அவர் அவர் செய்த கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப(கெட்ட) பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் தான் சனிபகவான் ஆவார்.

சனி பகவான் எப்போதும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு 2 1/2 வருடம் ஆகும்.

அந்த 2 1/2 வருடம் முழுவதும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப(கெட்ட) பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பார்த்தால், சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தமிழுக்கு தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவான் ஆனவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற 2 1/2 வருடம் முழுவம் அள்ளி தர உள்ளார்.

2020-2023 சனிப்பெயர்ச்சியில் இந்த 3 ராசிகள் பலம் பெறுகின்றன?
சனிதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் எப்போதுமே தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை அள்ளி தர கூடியவர்.

சனிதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து முறையே 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.

சனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில்,

அதன் அடிப்படையில்,

விருச்சிக ராசிக்கு 3ஆம் இடத்திலும்
சிம்ம ராசிக்கு 6ஆம் இடத்திலும்
மீன ராசிக்கு 11ஆம் இடத்திலும்
இருந்து நன்மை செய்யவுள்ளார்.

இனி வருகின்ற 2 1/2 வருடம் முழுவதும் மேற்கண்ட 3 ராசிகர்களுக்கும் சுப செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைகூடி நல்ல பலன்களையே அளிக்கும்.

“ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும். மறக்காமல் கமெண்ட் பகுதியில் “ஓம் சத்குருவே நம” அளித்து உங்களுக்கான பலனை பெறுவதுடன் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்கள் பலன் பெற உதவுவதன் மூலம் நீங்களும் பயன் பெறுவீர்கள்.

குறிப்பு – சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது.