தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தவறான கதையை தேர்வு செய்து பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடம் பிடித்தவர் நடிகை பூனம் பஜ்வா.

கடந்த 2008ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அதே வருடம் ஜீவா ஜோடியாக “தெனாவட்டு” என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

அதன் பிறகு “தம்பிக்கோட்டை” மற்றும் “ரோமியோ ஜூலியட்” போன்ற படங்களிலும் தென்பட்டார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த இவர், எந்த சினிமாவிலும் நிலைக்க முடியவில்லை.

பிறகு க-வர்ச்சியில் இறங்கியவர், “குப்பத்து ராஜா” திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் உடன் அநியாயத்துக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருப்பார். இருந்தும் தமிழ் சினிமா அவரை கைவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்பொழுது சேலத்து மாம்பழம் போல் மஞ்சள் நிற சேலையில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.