மேஷ ராசி நேயர்களே

சூரியன் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுக்கவும். அரசாங்க காரியங்கள் தாமதமானாலும் நல்லபடியாக முடியும் செவ்வாய் பலமாக இருப்பதால் எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவார்கள் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவும் வாய்ப்புகள் உண்டு. மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,குரு பலமாக இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் ஏற்படும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஒருசிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட பணவரவு கூடுதலாக கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் தாமதமாக நடைபெறும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காது, மாத பிற்பகுதியில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவ மாணவியர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பாராட்டு பெறுவீர்கள். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அலுவலகத்தில் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்: நவம்பர் 18, 24, 25, 27 மற்றும் டிசம்பர் 1, 2, 5, 6, 11, 12, 14, 15

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 19, 20 இந்த நாட்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்

அதிர்ஷ்ட எண்கள் : 3 ,5 ,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி,

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது, சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை தரும்.

ரிஷப ராசி நேயர்களே

மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் காரியங்களில் வெற்றி உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்திற்கு தடை இருக்காது. புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்களும் அதன் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். இந்நேரத்தில் பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவிகளும் உண்டு. பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும், மாதக்கடைசியில் உறவினர்களால் சில பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், உடல்நிலையில் சிறிது கவனம் எடுத்துக் கொள்ளவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயரதிகாரிகளிடம் பேசும் பொழுது பொறுமையாக இருக்கவும்.

தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும், போட்டிகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்கள் மனச் சோர்வும் உண்டாகும். புதிய முயற்சிகளை என் மாதத்தில் மேற்கொள்ள வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம்.

கலைத்துறையை சேர்ந்தவர்கள் கிடைத்த வாய்ப்பை கவனமாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மாணவ-மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. குடும்பத் தலைவி குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சாதகமான நாட்கள்: நவம்பர் 18, 19, 20, 27, 28, 29, 30 மற்றும் டிசம்பர் 3, 4, 7, 14, 15

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 21, 22 23 நாட்களில் பொறுமையைக் கடைபிடிக்கும்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

வழிபட வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி,வெங்கடாசலபதி,

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

மிதுன ராசி நேயர்களே

சூரியன், புதன், சனி மற்றும் குரு ஆகியோர் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகமாகும். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய சந்தர்ப்பம் அமையும். மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்சனை கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனால் அதை சமாளித்து விடுவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் வெளி மாநிலங்களில் இருக்கின்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு போய்வரும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த படுத்துவதற்கான காலகட்டமிது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சொந்த தொழில் செய்யும் பெண்மணிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நல்ல மரியாதையுடன் கூடிய பொறுப்பு கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20, 21, 23,29,30 மற்றும் டிசம்பர் 2, 5, 6,9,10

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 24, 25 இந்த நாட்களில் புது முயற்சியை தவிர்க்கவும்

அதிர்ஷ்ட எண்கள்: 1 ,7, 9

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை, முருகப்பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்தசஸ்டி பாராயணம் செய்வதும் சனிக்கிழமைகளில் அனுமன் அர்ச்சனை செய்வதும் நற்பலன்களைத் தரும்.

கடக ராசி நேயர்களே

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாத பிற்பகுதியில் குடும்ப பெரியோர்கள் நன்மைகள் நடக்கும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆனால் நாளில் குரு இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும்.

அலுவலகத்தில் அதிகமான பணிச்சுமை ஏற்படும். உடல் அசதியும் உண்டாகும். சிலருக்கு திடீர் இடமாற்றம், பணி மாற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். கலைத்துறை சார்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். சக கலைஞர்களால் நன்மைகள் ஏற்படும்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுவது நன்மை பயக்கும். குடும்பத்தலைவி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத்துக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு சில சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: நவம்பர் 21, 22, 24, 25, 30 மற்றும் டிசம்பர் 1, 2, 3, 7, 11, 12,

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 26, 27 இதில் பொறுமையாக இருக்கவும்

அதிஷ்ட எண்கள்: 4, 6 வழிபட வேண்டிய தெய்வம் அம்பிகை மகா விஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

சிம்ம ராசி நேயர்களே

புதன், கேது, சுக்கிரன் ஆகியோர் சாதகமான பலன்களை தர இருக்கின்றனர். மாத பிற்பகுதியில் செவ்வாயும் சாதகமான இடத்தில் வருவதால் பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகமாகும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். ஒரு சிலர் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர்களால் உதவி உண்டாகும். உறவினர்கள் விஷயத்தில் சற்று கவனமாக நடந்துகொள்வது நன்மை பயக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.அலுவலகத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத் துறையை சேர்ந்த அன்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவ-மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். குடும்பத் தலைவிக்கு பலவகைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: நவம்பர் 18, 24, 25, 27 மற்றும் டிசம்பர் 3, 4, 5, 6, 10, 14 ,15

சந்திராஷ்டம நாட்கள்: 28, 29, 30 இந்த நாட்களில் பொறுமை அவசியம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7

பரிகாரம்:வழிபடவேண்டிய தெய்வம் சிவபெருமான் ஆஞ்சநேயர் திங்கள்தோறும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவது நன்மை பயக்கும்.

கன்னி ராசி நேயர்களே

இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமாக, ஏற்றம் தரும் மாதமாகவும் இருக்கும். குரு, சூரியன், சனி, ராகு ஆகியோர் மிக உயர்வான பலன்களை கொடுக்க இருக்கிறார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றியடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். சுபநிகழ்ச்சிகள் திருமண முயற்சிகள் சாதகமாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல வாய்ப்புகள், தாராள பணவரவும் உண்டு. மாணவ-மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஓரளவு படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம் ஆகும். அனைத்து ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அனுகூலமான மாதமிது.

சாதகமான நாட்கள்: நவம்பர் 19, 20, 28, 30 மற்றும் டிசம்பர் 5, 6,7, 11

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 1,2 இந்த நாட்களில் புது முயற்சியை தவிர்க்கவும்

அதிர்ஷ்ட எண்கள்: 1,7, 9

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான் விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

துலாம் ராசி நேயர்களே

இந்த மாதத்தில் சுக்கிரன் தவிர மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லை அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு துலாம் ராசி நேயர்களுக்கு நல்ல நேரம். குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் எந்தவித தடங்கலுமின்றி நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையும் சிரமப்பட்டுதான் முடிக்க வேண்டும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவ மாணவியருக்கு படிப்பில் இருந்த தேக்கநிலை மாறும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தலைவிக்கு மகிழ்ச்சி தரும் மதமாகவே இது அமையும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சாதகமான நாள்: நவம்பர் 18, 21, 22,23, 29,30 மற்றும் டிசம்பர் 1,2, 7,9,14, 15

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 3, 4 இந்த நாட்களில் எச்சரிக்கை தேவை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 7

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் பெருமாள்

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும்.

விருச்சக ராசி நேயர்களே

மாதத் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பண வரவு மகிழ்ச்சி தரும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனையும் லாபம் அதிகமாகும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடி வரும், வருமானமும் அதிகரிக்கும். மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. குடும்பத்தை நிர்வாகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமாகவே இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: நவம்பர் 19,20 ,24 மற்றும் டிசம்பர் 1, 2, 3, 4, 10, 11, 12, 13

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 5, 6 கடன் விஷயத்தில் கவனம் தேவை

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி,ஆஞ்சநேயர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும்.

தனுசு ராசி நேயர்களே

ராசி அதிபதி குருபகவான் லாப வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை முன்னேற்றத்திற்கான வழி வகைகள் பிறக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வார்கள். மாத பிற்பகுதியில் ஒரு சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு மன கஷ்டங்கள் வந்து மறையும். மாத பிற்பகுதியில் உறவினர்கள் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்ப விஷயங்களில் உறவினர்களின் தலையிட அனுமதிக்காதீர்கள். ஒருசிலருக்கு வாகனத்தில் சிறுசிறு விபத்துகள் ஏற்படும் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத் தலைவிக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம். வேலை பார்க்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சாதகமான நாட்கள்: நவம்பர் 18, 21, 22, 23, 27 மற்றும் டிசம்பர் 3, 4, 5, 6, 11, 12, 14, 15

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 7, 8

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

வழிபட வேண்டிய தெய்வம்: தெட்சணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும்.

மகர ராசி நேயர்களே

இம்மாதம் சூரியன், புதன், சனி ஆகியோர் உடன் மாத பிற்பகுதியில் சுக்கிரனும் நற்பலன்களை தர இருக்கிறார். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு உறவினர் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் மேலும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகமும் இருக்கிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். ஒரு சிலருக்கு வீட்டில் பொருட்கள் களவு போக கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகமாகும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்புகள் கூடும். அனுசரித்து செல்வது நல்லது. மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் கூடும். நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத் தலைவிக்கு இம்மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்

சாதகமான நாள்கள்: நவம்பர் 18, 19, 20 ,24, 25, 29, 30 மற்றும் டிசம்பர் 5, 6, 7, 14 ,15

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 9, 10 இந்த நாட்களில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமியில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

கும்ப ராசி நேயர்களே

சூரியன், புதன், குரு, ராகு ஆகியோர் அனுகூலமாக இருக்கிறார்கள். இதனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் நடைபெறும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். தடைபட்ட திருமணம் நடைபெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வார்கள் .

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது புதிய முதலீடு செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் சில எதிர்ப்புகள் ஏற்படும். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத்தில் தலைவிகளுக்கு மகிழ்ச்சிகரமான மாதமிது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20, 21, 23, 27 மற்றும் டிசம்பர் 1, 2, 7, 9, 10

சந்திராஷ்டம நாட்கள்: 11, 12, 13 நாட்களில் புது முயற்சியை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 2,5

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்க்கை

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மையளிக்கும்.

மீன ராசி நேயர்களே

சுக்கிரன் மற்றும் கேது ஆகியோரால் ஆகியோரால் நன்மை ஏற்படும், மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. ஆகையால் எந்த ஒரு காரியமும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தாமதங்கள் ஏற்படும்,பொறுமை மிகவும் அவசியம். வீண் விவாதங்களில் ஈடுபட கூடாது. தேவையற்ற அலைச்சல்கள் மனசோர்வு உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் ஒருசிலருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும். மாத பிற்பகுதியில் மேற்கூறியவற்றில் இருந்து நல்ல மாற்றங்கள் ஒவ்வொன்றாக ஏற்படும். ஒரு சில நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவு உழைப்பு போடுகிறதோ அந்த அளவுக்கு லாபம் கிடைக்கும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு கடினமான முயற்சி செய்தால் மட்டுமே ஒரு சில நன்மைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளும் மிகவும் கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும். குடும்ப தலைவிகளுக்கு சிரமம் தரும் மாதமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை பளு ஏற்படும்.

சாதகமான நாள்: நவம்பர் 21,22, 23, 24, 29, 30 மற்றும் டிசம்பர் 3, 4,9,10, 12 ,

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7, 9

வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகங்களில் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும்.

இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள் இதை உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும். உங்களால் ஒருவர் பயன் அடைந்தாலும் அது மிகவும் நன்மை பயக்கும். பொருள் உதவி செய்ய முடியாதவர்கள் இந்த உதவி செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை திட்டமிட்டு கொள்வார்கள் நன்றி.