“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது “தனுஷ்-40” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா நடிக்கிறார்.

இந்த நிலையில் “தனுஷ்-40” படத்துக்கு “சுருளி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்கள் வெளியே கசிந்துள்ளதால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.