விஜய் ஆண்டனி நடித்த “கொலைகாரன்” படத்தில் நடித்தவர் ஆஷிமா நெர்வால். தற்போது ஆரவ் ஜோடியாக “ராஜபீமா” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது அம்மாவுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்ற ஆஷிமா, அங்குள்ள கடற்ரையில் கிளாமராக உடை அணிந்து வலம் வந்திருக்கிறார். இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆஷிமா தனது பயண அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை’ என்று தெரிவித்தார்.

நடிகை ஆஷிமா நர்வால் இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேவிய நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் 2015 ஆம் மிஸ் இந்தியா குலோபல் அழகி பட்டம் வென்றவர்.