தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் அவர் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்துவருகிறார். சந்தானத்தின் மனைவி உஷா. இவர்களுக்கு நிபுன் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் அண்மையில் சந்தானம் தனது மகனை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.