எல்லா துறைகளிலும் வாரிசுகள் வருவதை போன்று சினிமாவிலும் வாரிசுகளின் வருகை எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். சினிமாவில் நடிப்பு என்கிற ஏரியாவுக்கு வரும் வாரிசுகள்தான் பெரும்பாலும் கவனிக்கப்படுகிறார்கள். எம்ஜிஆருக்கு நேரடி வாரிசு இல்லை, என்றாலும் தூரத்து உறவினர்கள் சிலர் அவரது வாரிசு என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், தனது வாரிசு என்று எம்ஜிஆராலேயே அறிவிக்கப்பட்டவர், கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் இவர், முக்கியமான பல படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியிருக்கிறார். கே.பாக்யராஜ் தன் மகள், மகன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

ஒரு காலகட்டம் வரை தன் வாரிசுகள் யாரையும் சிவாஜி சினிமாவுக்குள் அனுமதிக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று நினைத்திருந்த பிரபுவை திடீரென சங்கிலியில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பிரபுவின் வளர்ச்சி அபிரிதமானது. 150- படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். பிரபு தவிர சிவாஜி குடும்பத்தில் யாரும் சோபிக்கவில்லை.

ராம்குமார் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவர் தன்னை தயாரிப்பாளராகவே அடையாளப்படுத்தி கொண்டார். அவரது மகன் துஷ்யந்த், மச்சி என்ற ஒரு படத்துக்கு பிறகு ஒதுங்கி கொண்டார். பிரபுவின் மகன், விக்ரம் பிரபு கும்கி படம் வழியாக ஹீரோவாக அறிமுகமானார். தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை ஹீரோவாக்கினார்.

சினிமாவில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லாமல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த முத்துராமன் மகன் கார்த்திக்கை அள்ளி வந்து அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அன்று முதல் அமரன் வரை ஆடித் தீர்த்தார் கார்த்திக். இப்போது அவரது மகன் கவுதம், மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

நாகேஷ் மகன் ஆனந்த் பாபு, டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு தனது தனித்த நடன திறமையாயல் சில படங்கள் வரை பயணப்பட்டார். ரவிச்சந்திரன் தன் மகன் அம்சவர்த்தனை தனது சொந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வந்த வகையில் சில வெற்றிகரமான குடும்பங்கள் உள்ளன. அதில் முதல் இடம் வகிப்பது சிவகுமார் குடும்பம். தன் மகன்கள் இருவருமே சினிமாவுக்கு வருவதில் விருப்பம் இல்லாமல்தான் இருந்தார் மார்க்கண்டேயர். ஆனால், சினிமா விதி யாரை விட்டது? இயக்குநர் வஸந்த் வலிந்து அழைத்து வந்தார் மூத்தமகன் சூர்யாவை. அமீர், கார்த்திக்கை பருத்தி வீரனாக பக்குவப்படுத்தினார். இன்றைக்கு மூன்று வெற்றிகரமான ஹீரோக்களையும், ஒரு ஹீரோயினையும் (ஜோதிகா) கொண்ட குடும்பமாக சிவகுமார் குடும்பம் இருக்கிறது.

தன் மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரையும் சினிமாவுக்கு கொடுத்து இரண்டு நடிகர்கள், நான்கு ஹீரோயின்கள், ஒரு இயக்குநரை (ஹரி) கொண்ட மிகப்பெரிய கலைக் குடும்பமாக விஜயகுமார் குடும்பம் விளங்குகிறது. சாருஹாசன், சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா என்று கமல் குடும்பம் சினிமா குடும்பமாகவே திகழ்கிறது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன், முக்கிய இயக்குநர். இன்னொரு மகன் தனுஷ், சக்சஸ்புல் ஹீரோ. ரஜினி குடும்பத்தில் ஐஸ்வர்யா இயக்குநராகிவிட்டார். அடுத்த மகள் சவுந்தர்யா, அப்பாவையே இயக்கி கொண்டிருக்கிறார். எடிட்டர் மோக-னின் ஒரு மகன் ராஜா இயக்குநர், அடுத்தவரான ரவி, நடிகர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தன் இரு மகன்களையும் நடிகராக்கினார். டி.ராஜேந்தர், தன் மகன் சிம்புவை ஹீரோவாக்கிய கையோடு, இப்போது அடுத்த மகன் குறளரசனை தயார்படுத்தி வருகிறார்.

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் தன் மூன்று மகன்களையும் டான்ஸ் மாஸ்டர்களாக மாற்றியிருக்கிறார். இந்த பட்டியலில் இன்னொரு பழம்பெரும் குடும்பத்தையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அது எம்.ஆர்.ராதா குடும்பம். வாசு, ராதாரவி, ராதிகா என ஆலமரமாக சினிமாவில் வேரூன்றி நிற்கிறது ராதாவின் குடும்பம். நடிகைகள் தங்கள் வாரிசுகளை அறிமுப்படுத்தினாலும் அதில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

தேவிகா தன் மகள் கனகாவையும், ஜெயசித்ரா தன் மகள்கள் உமா – நட்சத்திராவையும், ஜெயசித்ரா, மனோரமா, வைஜயந்திமாலா ஆகியோர் தங்கள் மகன்களையும் திரையுலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.ராதா தன் மகள் கார்த்திகாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஆனால் அவரால் தமிழ் சினிமாவில் தாக்குபிடிக்க முடியவில்லை.

தொழில்நுட்பத்துறைக்கு வந்தால் இசையமைப்பாளர் இளையராஜா குடும்பமே வெற்றிகரமான வாரிசுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கார்த்திக்ராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரிணி என இளையராஜாவின் வாரிசுகள் அனைவருமே இசை அமைப்பாளர்களாக புகழ் பெற்றிருக்கிறார்கள்.

பெரிய இயக்குனர்களின் வாரிசுகள் யாரும் இயக்குனராக சாதித்ததாக தெரியவில்லை. பல பேரை ஹீரோக்களாகவும், ஹீரோயின்களாகவும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்த பாரதிராஜாவால் தன் மகனை ஹீரோவாக்க முடியவில்லை. பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர் என்ற புகழ்பெற்ற இயக்குநர்களின் வாரிசுகள் அந்தத் துறையில் வெற்றிபெறவில்லை.

தயாரிப்பாளர்களில் ஏவிஎம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களே தலைமுறைகளை தாண்டி தயாரிப்பாளர்களாக வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. சில வெற்றிகள், பல தோல்விகள் இருந்தாலும் வாரிசுகளின் வரவு சினிமாவுக்கு வளம் சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.

வாரிசு என்ற தகுதி சினிமாவில் நுழைவதற்கான எளிதான விசிட்டிங் கார்டு. அவ்வளவுதான். அதன் பிறகு அவரவரும் அவரவர் திறமையால்தால் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம், விஜய். இதனை இனி வரும் வாரிசுகள் உணர்ந்து கொண்டால் அவர்களாலும் வெற்றி பெற முடியும்.