அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு நடிகர்.

இந்த ஆண்டு இவரது நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் டீமே அஜித்தின் 61வது படமான வலிமை படத்திலும் இணைந்துள்ளது. அதன்படி வலிமை படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்திற்காக அஜித் வொர்க்கவுட் செய்து உடம்பை குறைத்திருக்கிறார். மேலும் எப்போதும் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கும் அஜித், ஃபுல் அன்ட் ஃபுல் கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்.

இந்த போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடர்பாக பேசிய படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் `வலிமை’ படத்துக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் தயாரானதும், `வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.