சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கும் கலைஞனாக உள்ள சிவகார்த்திகேயன் பல சின்னத்திரை நடிகர்களுக்கு சாதிக்கும் உணர்வையும் அளித்துள்ளார்.

தற்போது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த சயின்ஸ் பிக்ஷன் படம் தற்போது கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் இப்படம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முடிந்த உடன் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.