தமிழ் மொழியில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வென்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தனது சமுகவலைதள பக்கத்தில் தனியார் கார் டிரைவர் ஒருவர் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்அவர் கூறியதாவது பாதுகாப்பு இல்லாத பயணம் தனியார் கார் பயணம் எனவும் மேலும் தனியார் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். மேலும் காரின் நிலையும் மிக மோசமாக இருந்தது என கார் நம்பர் மற்றும் கார் ஓட்டுநரின் விவரங்களை தற்போது பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு பல ரசிகர்கள் ஆதரவும், பலர் சாலை கேவலமாத சரியில்லாமல் இருக்கலாம், மேலும் இவ்வாறு தேவையில்லாமல் குறைகூறி ஒரு டிரைவரின் வாழ்க்கையை பாழாக்காதீர்கள் என்பது போன்ற பதிவுகளை தற்போது பலர் வெளியிட்டு வருகின்றனர்.