பிக் பாஸ் போட்டியாளர்களான கவின், லாஸ்லியா காதல் முறிவு குறித்து முதன்முறையாக நடிகை மதுமிதா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3ல் டைட்டிலை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மதுமிதா. ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட சண்டையால் பாதியிலேயே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் மற்றும் கொண்டாட்டத்திற்கும் கூட அவர் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அதில் பிக் பாஸ் வீட்டில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

அவரிடம் கவிலியா காதல் முறிவிற்கு சேரன் தான் காரணமா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படி என்றால் கவின் – சாக்ஷி காதல் முறிவிற்கு யார் காரணம்?” என எதிர்கேள்வி எழுப்பினார். அதோடு நல்ல காதல்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சீசனில் கவின், லாஸ்லியா இடையேயான காதல் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் பெயரில் கவிலியா என்ற ஆர்மிக்களும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

இதனால் அவர்கள் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களது காதல் முறிவிற்கு இயக்குனர் சேரன் தான் முக்கிய காரணம் என ஆரம்பத்தில் இருந்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் சேரனும் கூட காட்டமாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.