இன்றைய சினிமா உலகில் நடிகைகள் பலர் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னனி நாயகியாக வலம் வருகிறார்கள். சில நாயகிகள் திருமணம் செய்து கொண்டாலும் தீவிர உடற்பயிற்சி மூலமாக ஒல்லியாக இளம் நாயகிகளுக்கு போட்டியாக சினிமா உலகில் கலக்கி வருகிறார்கள். ஆனால் இளம் நடிகை ஒருவர் 20 வயதில் திருமணம் செய்துகொண்டு 24 வயதில் இல்லத்தரசி போல குண்டாக காட்சியளிக்கின்றார்.

நடிகை அனு சித்தாரா, வயது 24. கேரள மாநிலம் கலாமண்டலத்தில் சிறு வயதிலே சேர்ந்து பரதம், கதக் உள்ளிட்ட பல நடனங்களை முழுமையாக கற்று தேர்ந்தவர். தன் வீட்டில் ‘நவரசா’ என்ற பெயரில் நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஹோம்லியாக நடித்து அசத்தி வருகிறார் நடிகை அனு சித்தாரா.

நடிகை அனு சித்தாரா கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்னு பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 24 வயதே ஆகும் நடிகை அனு சித்தாரா உடல் சற்று பருமனாகி அழகிய இல்லத்தரசியாக காட்சியளிக்கின்றார். அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை அனு சித்தாரா