தமிழ் சினிமாவில் எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் முன்னுக்கு வந்து இப்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் தான் தல அஜித். தல அஜித் படம் வரும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். தல அஜித் தான் ஒரு மிகப்பெரிய செலிப்ரிட்டி என்பதை எக்காரணத்தை கொண்டும் வெளிப்படுத்தமாட்டார்.

எல்லோரிடமும் பாசமாக பழகுவார். இவர் எங்கு சென்றாலும் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். ரசிகர்களை வைத்து அரசியல் செய்யாத ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான். பொதுவாக தல அஜித் சினிமா துறையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளமாட்டார். அது தன்னுடைய படத்தின் ஆடியோ லாஞ்ச்சாக இருந்தாலும் சரி.

படத்தின் எந்த ஒரு ப்ரமோஷனிலும் கலந்து கொள்ளமாட்டார். இந்த நிலையில் தான் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை என்பது குறித்து தல அஜித்தே பிரபல தொகுப்பாளர் கோபியிடம் தெரிவித்து உள்ளார். இது குறித்து தல அஜித் கோபியிடம் நான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு சில பேட்டிகள் கொடுத்தேன்.

அப்போது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. அதனால் பலரும் என்னை விமர்சித்தனர். அதுவும் தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா என பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன். அதையும் விமர்சனம் செய்தனர். அதன்பிறகு சில காலம் பேட்டி கொடுப்பதையே நிறுத்தினேன். அப்போதும் சிலர் என்ன இவர் பேசக் கூடமாட்டேன் என்கிறார் என விமர்சனம் செய்தனர்.

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தத்தில் வேறு விதமாக செய்திகளையும் போட ஆரம்பித்தனர். இதனால் தான் நான் பேட்டி கொடுப்பதையே நிறுத்திவிட்டேன் என தல அஜித்தே தொகுப்பாளர் கோபியிடம் உருக்கமாக தெரிவித்து உள்ளார். சரி, தல அஜித்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?