பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பி அதிரவைத்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் நேர்காணல் ஒன்றில் றுகையில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தான் காத்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தான் உப்புமா படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிய ஸ்ரீரெட்டி ஏற்கனவே வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதால் இனிமேலாவது நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்.

ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன் என்று இல்லை என்றும் போலீஸ், வில்லி என எந்த ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.

திரையுலகில் நீங்கள் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது யார்? என்று ஒரு கேள்விக்கு ஸ்ரீ ரெட்டி சற்றும் யோசிக்காமல் எந்த ஒரு காமமும் இல்லாமல் ஒரு அன்பின் வெளிப்பாடாக நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது நடிகர் அஜித் குமார். காரணம் அவரின் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.

அந்த படம் அவ்வளவு அற்புதமான திரைப்படம். அதில் வந்த முன்று பெண்களின் நிலை அனைத்தையும் நான் அனுபவித்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையே படமாக்கியது போல் இருந்தது அந்த திரைப்படம்.

சண்டை காட்சிகள், அவரது எக்ஸ்பிரெஸ்ஷன் இவை அனைத்தும் ஒரு லெஜெண்ட் என்பதை நிரூபிக்கிறது. என்னை கேட்டல் லெஜெண்ட் விருது அவருக்கு தான் வழங்குவேன். அவரின் கால்களில் விழுந்து வணங்குவேன் என்றார்.