சல்மான்கான் நடித்து பிரபுதேவா இயக்கத்தில் தபாங்-3 திரைப்படத்தை தமிழில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வினியோகம் செய்கின்றனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் டீசரை நடிகர் சல்மான்கான் சமீபத்தில் வெளியீட்டாளர். ஹீரோ படத்தின் டீசரும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்படத்தை பார்க்க சல்மான்கான் ஆர்வமாக உள்ளதாக தயாரிப்பாளர் ராஜேஷ் சமீபத்தில் கூறினார்.

மேலும் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான வரவேற்பு ஹீரோ படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றும் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தின் டீசரை சல்மான்கான் காட்ட வேண்டும் என்றுதான் நினைத்தோம், டீசரை பார்த்து ரசித்த சல்மான்கான் தானாகவே முன்வந்து இதை வெளியிடுகிறேன் என்றதுடன் டீசரில் பங்கு பெற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவ்வாறு அவர் கேட்கும் போது சல்மான்கானுக்கு தமிழ் திரையுலகை மீது இருக்கும் மரியாதை எங்களுக்கு தெரிந்தது. மேலும் ஹீரோ படம் முடிவடைந்தவுடன் படத்தை தான் முழுமையாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.