இந்த வருடம் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படங்கள் வெளி வந்தது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து இன்னும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பிகில் பெரிய பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். கைதி குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது, குறிப்பாக கைதி படம் ரிலீஸ் போது வெளிவந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை காட்டிலும், தற்போது அதிகமான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது என்பதை அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

கைதி படத்தின் வெற்றியை படக்குழுவினர் தமிழ்நாட்டில் கொண்டாடி வரும் அதேவேளையில், இத்திரைப்படம் ஆந்திராவிலும் நல்ல வசூல் மழை பொழிந்து வருகிறது. ஆந்திராவில் இரண்டு வார முடிவில் இத்திரைப்படம் 12.50 கோடி வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்தில் படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்புடன் கூடிய ஆர்வம் இருப்பதால், இத்திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்கள் அங்கு தாக்கு பிடித்து ஓடும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அவ்வாறு இன்னும் இரண்டு வாரம் தாக்கிய பிடித்து ஓடும் நிலையில் இத்திரைப்படம் குறைந்தது 17 கோடி வசூல் செய்யும் என்று தெரிகிறது. 17 கோடி இத்திரைப்படம் வசூல் செய்யும் பட்சத்தில் கார்த்தியின் கைதி திரைப்படம் ஆந்திராவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றுவிடும்.