நடிகை ஹன்சிகா நடிகர் தனுசுக்கு ஜோடியாக முதன் முதலில் மாப்பிளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்ஷிகா. சற்று கொழு உடம்பு, குண்டான தோற்றம் இப்படி தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை ஹன்ஷிகா.இதனை அடுத்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் நடிகை ஹன்சிகா.

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க இவரது உடல் சதையும் சற்று அளவு கூடிக்கொண்டே போனது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைக்க படு தீவிர கடின முயற்சியில் இறங்கினார்.பயங்கர உடற்பயிற்சி, முழுநேர உணவு கடுஇப்படி மிகவும் கஷ்டப்பட்டு தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார் நடிகை ஹன்ஷிகா.

தற்போது அனைவராலும் குட்டி குஷ்பூ என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்துவந்த நிலையில் தற்போது எலும்பும் தோலுமாக மாறியுள்ள நடிகை ஹன்ஷிகாவை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் வைரலாக பரவி வருகிறது.