நடிகர் தல அஜீத் மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் குழந்தை அனிகா சுரேந்திரன்.2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மூலம் மிகப் பிரபலமானவர் அனிகா. அதன்பிறகு இவர் தமிழ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இவர் உருவெடுத்தார்.

மீண்டும் இந்தாண்டு துவக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாகவே இவர் நடித்தார்.அஜித்துக்கு இவர்தான் உண்மையான மகள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை அந்த அளவுக்கு இருவரும் மிகுந்த நெருக்கமாகி விட்டனர். மீண்டும் அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேச்சு தற்போது அடிபடுகிறது.

தற்போது நடிகர் அஜித்தின் மனம் கவர்ந்த இந்த குழந்தை நட்சத்திரம் தற்போது பருவக் குமரியாக தற்போது மாறிவிட்டார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்ணு வைத்து வருகின்றனர்.விரைவில் இவர் நடிகையாக மாறினால் கூட ஆச்சர்யம் அடைவதற்கு இல்லை என்பது தான் உண்மை.