சினிமாவில் இருந்து சின்னதாக இடைவெளி எடுத்த சுருதிஹாசன் தற்போது மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டார். காதல் முறிவு ஏற்பட்ட பிறகு அதை நினைத்து அழுது கொண்டே இல்லாமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகிவிட்டாா்.

இந்த நிலையில் அவருடைய வாழ்க்கை மற்றும் பெற்றோர்கள் பற்றி பேட்டி ஒன்றில் கூறியதாவது, பெற்றோர்கள் ஒன்றாக இருந்தாலும் வலி என்பது தவிர்க்க முடியாது.வலி என்பது வாழ்க்கையின் ஒரு பாகம். அம்மா பிரிந்தது மற்றவர்களுக்குத்தான் செய்தி வீட்டில் உள்ளவர்களுக்கு அது செய்தி அல்ல. அவர்கள் பிரிந்தது அதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் அவர்கள் இருவருமே மிகவும் நல்லவர்கள், அருமையானவர்கள்.

இருவரும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். இதனால் அவர்கள் தனியாக இருப்பது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால், அதுவே எனக்கும் மகிழ்ச்சி. அது வெளி உலகிற்கு பிரிவாக தான் தெரியும். ஆனால் நாம் அதற்கு ஏற்கனவே தயாராகி விடுவோம் என்றார்.

சுருதி ஹாசன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். அவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பிரிந்துவிட்டனர். காதல் முறிந்தாலும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என்று மைக்கேல் கார்சேல் தெரிவித்துள்ளார். காதல் முறிவை அவர் தன் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.