தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கமுடியாத திரைப்படம் என்றால் அது “இந்தியன்”. இன்றைய சமூக பிரச்சனைகளை அன்றே தோலுரித்துக் காட்டிய படம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வேறு எதுவும் தெரியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் திரைக்கதையிலும் என்னால் சாதிக்க முடியும் என நிரூபித்த திரைப்படம்.

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார்கள். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டாம் பாகமாக வெளிவந்த எந்த படமும் அவ்வளவு பெரிதாகப் போகவில்லை. இருந்தாலும் ஷங்கரின் படம் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

உலக நாயகன் கமலின் பிறந்த நாளான இன்று அனைவரும் வாழ்த்து சொல்லிவிட்டு நிலையில் ஷங்கர் இன்னும் சொல்லவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் “இந்தியன்-2” போஸ்டருடன் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிவிட்டார் ஷங்கர்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா புரோடக்சன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.