உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கமல் ஹாஸன் திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று துவங்கி 3 நாட்களாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 9ஆம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் உங்கள் நான் நிகழ்ச்சியில் இளையராஜா கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் இதுநாள் வரை பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித் இந்நிகழ்ச்சிக்கு வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதியான முடிவு வெளிவரவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய் டெல்லியில் விஜய்64 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அவர் வருவாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அப்படி அவர் வந்தால் பல காலம் கழித்து ரஜினி, கமல், அஜித், விஜய் அவர்களை ஒரே மேடையில் பார்க்கும் சந்தோசம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

இதற்கிடையே நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார் அதாவது எக்காரணம் கொண்டும் ஃபிளெக்ஸுகள் வைக்க கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.